போக்சோ கோர்ட் நீதிபதி பணி ஓய்வு
கோவை: கோவை முதன்மை போக்சோ கோர்ட் நீதிபதியாக , கடந்தாண்டு மே 7ம் தேதி முதல் பணியாற்றி வருபவர் பகவதியம்மாள். இவரது பணிக்காலம் முடிவதை தொடர்ந்து இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார்.
ஓய்வு பெறுவதை முன்னிட்டு, கோவை எஸ்.சி-எஸ்.டி., சிறப்பு கோர்ட் நீதிபதி விவேகானந்தன், போக்சோ கோர்ட்டிற்கு பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சூலுாரில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தி வந்தவர் பகவதியம்மாள். இந்த வழக்கில் ஜூலை 1ம் தேதி முதல், பொறுப்பு நீதிபதி விவேகானந்தன் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement