ஒரே நாளில் இரண்டு முறை மாற்றம் கண்ட தங்கம் விலை; இன்றைய நிலவரம் இதோ!

2


சென்னை: சென்னையில் இன்று காலை (ஜூன் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து 13,030 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மதியம் சவரனுக்கு 1360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,370 ரூபாய்க்கும், சவரன், 1,06,960 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று (ஜூன் 29), தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் குறைந்து, 13,300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் சரிவடைந்து, 1,06,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (ஜூன் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து 13,030 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மதியம் தங்கம் விலை சவரனுக்கு 1360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 170 ரூபாய் அதிகரித்து 13,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை இன்று காலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து, 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து 240 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. மதியம் திடீரென வெள்ளி விலை உயர்வை கண்டது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 245 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.


கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

சிறப்பு வீடியோ!

இன்றைய தங்கம் விலை நிலவரங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement