ஏரி குடிமராமத்து திட்டத்தில் செய்ய முடியாத 74 பணிகளுக்கு செலவிடப்பட்ட நிதியை திரும்ப செலுத்த உத்தரவு
காஞ்சிபுரம்: ஏரி குடிமராமத்து திட்டத்தில் செய்ய முடியாத 74 பணிகளுக்கு 15.87 லட்சம் ரூபாய் பணி ஒப்பந்தம் எடுத்தவர்கள் திரும்ப செலுத்த வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், உத்திர மேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகளில், மத்திய அரசு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2016- - 17ம் நிதி ஆண்டு முதல், 2020- - 21ம் நிதி ஆண்டு வரையில், அ.தி.மு.க., அரசு ஏரி குடிமராமத்து பணிகள் தொடங்கின.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு கட்டமாக 77 பணிகளுக்கு 27.05 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதில் மதகு சீரமைப்பு, கால்வாய் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகளை 100 நாள் பணியாளர்கள் மூலமாக செய்ய வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு இருந்தன.
ஏரியில் தண்ணீர் இருப்பு, கால்வாய் கட்ட முடியாத சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 74 பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தன.
அதன் பிறகு, சிமென்ட், கூலி ஆட்களின் சம்பளம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், குறைந்த நிதியை பயன்படுத்தி பணிகளை நிறைவு செய்ய முடியாத நிலை இருந்தன.
இதுபோன்ற பணிகள் அடையாளம் காணப்பட்டு, அந்த பணிக்கு செலவிடப்பட்ட நிதியை மீண்டும் மத்திய அரசின் வங்கி கணக்கிற்கு பணி ஒப்பந்தம் எடுத்தவர் செலுத்த வேண்டும் என, அந்தந்த தொகுதி பொறியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 74 பணிகளுக்கு,15.87 லட்சம் ரூபாய் 100 நாள் பணியாளர்களுக்கு சென்று உள்ளது. இந்த பணத்தை, ஒப்பந்தம் எடுத்தவரிடம் பொறியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் வசூலிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சி புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகம் முழுதும் இருக்கும் பிரச்னைகள் இது. பிற மாவட்டங்களை காட்டிலும், நம் மாவட்டத்தில் குறைந்த பணிகள் மற்றும் தொகையும் குறைவு தான் செலுத்த வேண்டும். விரைவில் சரியாகிவிடும்' என்றார்.
மேலும்
-
இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக இயங்கும்; திருமா நம்பிக்கை
-
சொல்கிறார்கள்
-
தரங்கம்பாடி அருகே காதலர்கள் சடலமாக கண்டெடுப்பு; ஆணவக்கொலை என ஒரு தரப்பு புகார்
-
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 சரிவு
-
இந்திய ராணுவத்தில் பணியாற்றியது பாக்கியம்; பணி நிறைவு விழாவில் தலைமை தளபதி நெகிழ்ச்சி
-
அமோனியா வாயு கசிவு விவகாரம்: 68 பேர் அசாமிற்கு அனுப்பி வைப்பு