இந்திய ராணுவத்தில் பணியாற்றியது பாக்கியம்; பணி நிறைவு விழாவில் தலைமை தளபதி நெகிழ்ச்சி
புதுடில்லி: 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய ராணுவத்தில் பணியாற்றியது என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாகும் என பணிநிறைவு விழாவில் ஓய்வு பெறும் ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார்.
இது குறித்து பணிநிறைவு விழாவில் அவர் பேசியதாவது: இன்று, ராணுவத் தலைமைத் தளபதியாக எனது பதவிக்காலம் நிறைவடையும் வேளையில் நான் நன்றியுணர்வு, பெருமிதம் மற்றும் மனநிறைவுடன் இருக்கிறேன். சைனிக் பள்ளியிலிருந்து இந்த நிலை வரை நான் மேற்கொண்ட பயணம் மறக்க முடியாத ஒன்றாகும். 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய ராணுவத்தில் பணியாற்றியது என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாகும்.
இந்திய ராணுவம் தனது வலிமையை எந்தவொரு தனிநபரிடமிருந்தும் பெறுவதில்லை; மாறாக, அதன் வீரர்கள், தளபதிகள், முன்னாள் ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கை ஆகியவற்றிலிருந்தே அந்த வலிமையைப் பெறுகிறது. முதலாவதாக கடமையாற்றும் போது தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் உட்பட, இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரருக்கும் எனது மரியாதையைச் செலுத்துகிறேன்.
எங்கள் வீரர்கள் மலைகள், பாலைவனங்கள், பனிப்பாறைகள், காடுகள் மற்றும் சவாலான எல்லைப் பகுதிகள் என எத்தகைய சூழலிலும் நாட்டைப் பாதுகாத்து வருகின்றனர். எந்தவொரு தளபதியின் உண்மையான வலிமையும் அந்த வீரரிடமே உள்ளது. வீரர்களின் அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் ஒழுக்கம் ஆகியவையே இந்திய ராணுவத்தின் அடையாளம். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் வீரர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
ஐநா சபையின் பணிகளிலும், இயற்கை பேரிடர் மீட்பு நடவடிக்கைகளிலும் இந்திய ராணுவம் ஆற்றிய சிறப்பான செயல்பாடுகள் மூலம், உலக அளவில் இந்தியாவுக்குப் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. காங்கோவின் அடர்ந்த காடுகளாக இருந்தாலும் சரி, அல்லது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலா பகுதியாக இருந்தாலும் சரி, ராணுவம் தனது சேவையின் மூலம் தனது நற்பெயரைக் கட்டிக்காத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய ராணுவம் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இதற்கு ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வாறு உபேந்திர திவேதி கூறினார்.
ஜெய்ஹிந்த். நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம். வந்தேமாதரம்
THANKS , CONGRASULATION,JAI HIND
வாழும் கடவுள் தங்களை போன்றோர். தாங்கள் விழித்து பணியாற்றியதால்தான் இந்திய மக்கள் நிம்மதியுடன் வாழ்கிறோம் . நன்றி சொல்ல வார்த்தை இல்லை பாதம் தொட்டு வணங்குகிறேன் .
வாழும் கடவுள் தங்களை போன்றோர் . வணங்குகிறேன் . முன்னாள் சிப்பாய் என்ற பெருமையுடன்.
JaiHind
கொஞ்ச நாள் கழிச்சு சர்ச்சைக்குள்ளாகும் வகையில் புத்தகம் எழுதாமல் இருந்தால் நல்லது
உங்கள் தேசிய சேவைக்கு மிக்க நன்றி, வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்