அமோனியா வாயு கசிவு விவகாரம்: 68 பேர் அசாமிற்கு அனுப்பி வைப்பு

திருவள்ளூர்: அமோனியா வாயு கசிந்த விவகாரத்தில், திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த, 68 பேர், அசாம் மாநிலத்திற்கு அனுப் பி வைக்கப் பட்டனர்.

தி ருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில், இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த, 21ம் தேதி அம்மோனி யா வாயு கசிந்தது.

இந்த விபத்தில், 83 பேர் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதில், ஒடிஷாவைச் சேர்ந்த, 13 பேர்; அசாமை சேர்ந்த 2 பேர்; ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் என, 16 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சிகிச்சை முடிந்து, 41 பேர் முகாமிற்கு திரும்பிய நிலையில், 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொழிற்சாலையில் பணியாற்றி, பாதிப்பின்றி மீட்கப்பட்ட, 147 பேர், பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட, 59 பெண்கள், அவர்கள் விருப்பத்தின் பேரில், 27ம் தேதி, ஒடிஷாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று மாலை, 44 ஆண்கள், 24 பெண்கள் என மொத்தம், 68 பேர் அசாம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement