வெளிமாநில தக்காளி வரத்து அதிகரிப்பு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி (30 கிலோ பெட்டி) – 450, தேங்காய் (ஒன்று) – 18, கத்திரிக்காய் கிலோ – 50, முருங்கைக்காய் – 70, வெண்டைக்காய் – 55, முள்ளங்கி – 25, பூசணிக்காய் – 10, அரசாணிக்காய் – 15, பாகற்காய் – 35, புடலை – 20, சுரைக்காய் – 20, பீர்க்கங்காய் – 60, வெள்ளரிக்காய் – 20, அவரைக்காய் – 80, பீட்ரூட் – 40 மற்றும் பச்சை மிளகாய் – 50 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று தேங்காய் (ஒன்று) – 2, கத்தரிக்காய் – 5, முருங்கைக்காய் – 20, முள்ளங்கி – 5, பாகற்காய் – 20, சுரைக்காய் – 8, பீர்க்கங்காய் – 10, அவரைக்காய் – 10 ரூபாய் விலை குறைந்துள்ளது.
இதே போன்று, வெண்டைக்காய் கிலா – 10, முள்ளங்கி – 5, அரசாணிக்காய் – 3, புடலை – 3, பீட்ரூட் – 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், ‘மார்க்கெட்டில் உள்ளூர் தக்காளி வரத்து குறைவாகவும், வெளி மாநில தக்காளி வரத்து, 250 பெட்டிகள் வரை அதிகமாகவும் இருந்தது. இதனால், தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தது. சில காய்கறிகள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் உள்ளூர் காய்கறிகள் வரத்து அதிகரிக்கும்,’ என்றனர்.