உண்டியல் உடைப்பு; போலீசார் விசாரணை
சிவகங்கை:சிவகங்கை காஞ்சிரங்கால் கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் சண்முகராஜ் 32. இவர் காஞ்சிரங்கால் பஸ் ஸ்டாப்பில் உள்ள மாரியம்மன்கோயில் பூஜாரியாக உள்ளார். ஜூன்29 காலை 7:00 மணிக்கு சண்முகராஜ் கோயிலில் உள்ள விளக்கை அணைக்க சென்றார். அப்போது கோயிலின் பூட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து சண்முகராஜ் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் கோயில் உண்டியலை உடைத்தவர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement