கழிப்பறை இல்லாத பஸ் ஸ்டாண்ட்

தேவகோட்டை:தேவகோட்டை நகரில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வேறு பகுதியில் செயல்படுகிறது. ஆனாலும் பெரும்பாலான பயணிகள் பழைய பஸ் ஸ்டாண்டில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். தற்காலிக பஸ் ஸ்டாண்டை குறைவான நபர்களே பயன்படுத்துகின்றனர்.

போக்குவரத்து நெருக்கடியான நிலையில் வெளியூர் பயணிகள் கழிப்பறை வசதியின்றி அவதிப்படுகின்றனர். நகராட்சியினர் புது பஸ் ஸ்டாண்ட் கட்டி முடியும் வரை தற்காலிக கழிப்பறை அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement