பலசரக்கு கடையில் திருடிய 3 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பலசரக்கு கடை பூட்டை உடைத்து திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 

ராமநாதபுரம் பாண்டிக்கண்மாய் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் 71. பலசரக்கு கடை அமைத்து வியாபாரம் செய்கிறார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு அலைபேசி திருடு போனது தெரிய வந்தது.  ராமநாதபுரம் பஜார் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்த போது 3 வாலிபர்கள் கடையை உடைத்து திருடியது தெரிந்தது. திருட்டில் ஈடுபட்டது கே.கே.நகர் சித்திரவேல் மகன் சுரேஷ் 31, கதிரேசன் மகன் சாத்தையா 37, மீனாட்சிபுரம் மதி மகன் வினோத் 29, எனத் தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து பணம், அலைபேசியை கைப்பற்றினர். –––

Advertisement