உவ்வே... கழிப்பறைகளுக்கு அபராதம்: கமிஷனர் உத்தரவு
மதுரை: ‘‘மதுரை மாநகராட்சி எல்லைக்குள் செயல்படும் கட்டணக் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவில்லையெனில் ரூ.10ஆயிரம் அபராதம்’’ விதிக்க கமிஷனர் கவுரவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், தெப்பக்குளம், சிமென்ட் ரோடு, தயிர் மார்க்கெட், ஜம்புரோபுரம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கமிஷனர் நேற்று ஆய்வு செய்தார். அப்பகுதி கட்டண கழிப்பறைகளில் சென்று பார்த்தபோது சுகாதாரமின்றி துர்நாற்றம் வீசி மக்கள் பயன்படுத்த தகுதியற்றதாக இருந்தது தெரிந்தது.
உடனே நகர்நல பிரிவு அதிகாரிகளிடம், கட்டண கழிப்பறைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். சரியாக பராமரிக்காவிடில் சம்பந்தப்பட்டோருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்க அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதியில் ரோட்டோரம் குப்பை குவிந்து கிடந்தது. அலைபேசியில் போட்டோ எடுத்த கமிஷனர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி, உடன் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
எம்.எல்.ஏ., ஆய்வு எதிரொலியா கமிஷனர் ஆய்வுக்கு முதல்நாள் மாட்டுத்தாவணி கட்டணக் கழிப்பறையில் எம்.எல்.ஏ., கல்லாணை ஆய்வு செய்தார். அப்போது கழிப்பறை உட்பகுதியில் சரியாக பராமரிக்காததும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
ரூ.169 கோடி வங்கி நிதி மோசடி: ஓய்வு பெறும் நாளில் ஐ.ஏ.எஸ்., கைது
-
விரிவாக்க பகுதிகளில் திட்ட அனுமதி சி.எம்.டி.ஏ.,வுக்கு மாற்றுவதில் தாமதம்
-
வியாபாரியை கடத்தி நிர்வாணமாக்கி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியோர் கைது
-
போராட்ட குணமும் துணிச்சலும் அனைத்தையும் சாதிக்கும்!
-
மருத்துவமனையில் தீ நோயாளிகள் ஓட்டம்
-
குடும்ப தகராறில் தீக்குளித்த 'பெண் சீரியஸ்'