இந்திய அணிக்கு வெண்கலம் * ஆசிய யூத் டேபிள் டென்னிசில்
பாங்காக்: ஆசிய யூத் டேபிள் டென்னிசில் இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலம் கிடைத்தது.
தாய்லாந்தில் ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. 15, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் தனி நபர், அணிகளுக்கான போட்டிகள் நடக்கின்றன.
19 வயது அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அபிநந்த், பிரியானுஜ், பாலமுருகன், குஷால் இடம் பெற்ற அணி, வலிமையான சீனாவை எதிர் கொண்டது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோற்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
19 வயது கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் திவ்யான்ஷி, அபிநந்த் ஜோடி, சீனாவின் டாங் இரென், ஜியாங் இயி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 11-9 என கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 11-6 என வசப்படுத்தியது. மூன்றாவது செட்டிலும் ஆதிக்க செலுத்த, 11-7 என வென்றது.
முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்தது.
------------------------------------
மேலும்
-
ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு
-
இடியும் ஆபத்தில் அங்கன்வாடி கட்டடம் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் கல்வி
-
மனைவியால் சிக்கினார் மத்திய அமைச்சர்!
-
பெங்களூரு கல்குவாரியில் பாறை சரிந்தது: பீஹார் தொழிலாளர்கள் 7 பேர் பலி
-
நரி போல் சிலர் காத்திருக்கின்றனர்; அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
-
சொல்கிறார்கள் ––––––––– கீரை சாகுபடியில் ஓராண்டு லாபம் ரூ.11.20 லட்சம்!