சர்வதேச இந்திய கைப்பந்து போட்டிக்கு விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி மாணவர் முகமது பைசல், சர்வதேச அளவிலான இந்திய கைப்பந்து ஜூனியர் அணிக்கு தேர்வாகியுள்ளார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் மாணவர் முகமது பைசல் கணினி அறிவியல் துறையில் 3ம் ஆண்டு பயில்கிறார். இவர், சர்வதேச அளவிலான கைப்பந்து போட்டியில், இந்திய அணி சார்பில் ஜூனியர் பிரிவில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளார்.
இதற்கான தேர்வு போட்டி, உத்திரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் கடந்த ஏப்., 12,13 ஆகிய தேதிகளில் கேடிசிங் பாபு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
மாணவர் முகமது பைசல் ஜார்கண்ட் மாநிலத்தில் இந்திய அணிக்கான பயிற்சியில் நாளை (3ம் தேதி) முதல் வரும் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளதில் பங்கேற்கிறார். பின், 19 வது ஏசியன் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி, வரும் 15ம் தேதி முதல் 26 ம் தேதி வரை காகோ சைனாவில் சர்வதேச அளவிலான போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்கிறார்.
முன்னதாக, ஜார்கண்ட் மாநிலத்திற்கு புறப்பட்ட மாணவர் முகமது பைசலை, அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி முதல்வர் கனகசபாபதி வாழ்த்தி, வழியனுப்பினார். வேதியியல் துறை தலைவர் சதீஷ்குமார், கணினி அறிவியல் துறை தலைவர் மணவாளன் மற்றும் பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஜோதிப்பிரியா ஆகியோரும் மாணவர் முகமது பைசலை வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர். இந்த மாணவர் முகமது பைசல் அண்ணாமலை பல்கலைக்கழக அணி சார்பில் கடந்த இரு ஆண்டுகளாக தென்னிந்திய பல்கலைக்கழகம் இடையிலான போட்டியில் விளையாடி 3வது இடத்தை அணிக்கு தேடித்தந்து சாதனை படைத்துள்ளார்.
மேலும்
-
ரூ.169 கோடி வங்கி நிதி மோசடி: ஓய்வு பெறும் நாளில் ஐ.ஏ.எஸ்., கைது
-
விரிவாக்க பகுதிகளில் திட்ட அனுமதி சி.எம்.டி.ஏ.,வுக்கு மாற்றுவதில் தாமதம்
-
வியாபாரியை கடத்தி நிர்வாணமாக்கி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியோர் கைது
-
போராட்ட குணமும் துணிச்சலும் அனைத்தையும் சாதிக்கும்!
-
மருத்துவமனையில் தீ நோயாளிகள் ஓட்டம்
-
குடும்ப தகராறில் தீக்குளித்த 'பெண் சீரியஸ்'