பயணியர் நிழற்குடை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
ஸ்ரீபெரும்புதுார், ஜூலை 1–
ஸ்ரீபெரும்புதுார் அருகே, கன்டெய்னர் லாரியின் டயர் வெடித்ததில், கட்டுபாட்டை இழந்து பயணியர் நிழற்குடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை, துறைமுகத்தில் இருந்து, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றிக் கொண்டு, கர்நாடகா மாநிலம், டும்கூர் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. லாரியை தர்மபுரியைச் சேர்ந்த ஜெகன், 33, என்பவர் ஓட்டினார்.
குன்றத்துார் – ஸ்ரீபெரும்புதுார் சாலையில், அதிகாலை 3:00 மணிக்கு கட்சிப்பட்டு அருகே வந்த போது, கன்டெய்னரின் இடது முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதையடுத்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த பயணியர் நிழற்குடை மீது மோதியது. இதில், நிழற்குடை முற்றிலும் சேதமடைந்த நொறுங்கியது.
அதேபோல, லாரியின் முன்பக்கம் முழுதும் சேதமானது. விபத்தில், லாரியின் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், விபத்தில் சிக்கிய லாரியை, சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதிகாலை நேரம் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
அணுக்கனிம சுரங்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு ஏன்; முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி
-
தினமும் ஒரு திருக்குறள் மனப்பாடம் மாணவர்களுக்கு ஏ.எஸ்.பி., அறிவுரை
-
ரூ 4.10 கோடியில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடம் திறப்பு
-
(பட்டம் வாங்கும் கல்லுாரி) கல்லுாரியில் தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி
-
திறன் மேம்பாட்டு பயிற்சி
-
பயனற்ற ரேஷன் கடையை அகற்றுங்க