ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

மதுரை: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வகுமரேசன், பாரதிசிங்கம் தெரிவித்துள்ளதாவது:

மதுரை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி ஒதுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்களுக்கு இப்பணியில் விலக்கு அளிக்கலாம் என உள்ளது. இருப்பினும் பலருக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும். இப்பணிக்கு மதிப்பூதியம் வழங்கப்படுவதால் படித்த இளைஞர்களையும், தன்னார்வலர்களையும் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement