ரூ.76 லட்சம் முதல் 1 கோடிக்கு 2 சதவீத கமிஷன் மாநில செயற்குழு கூட்டத்தில் நிலத்தரகர்கள் முடிவு
சேலம்:தமிழக
நிலத்தரகர் நலச்சங்கம் சார்பில், மாநில செயற்குழு கூட்டம், சேலத்தில்
நேற்று நடந்தது. மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
அதில்
நிலத்தரகர் கமிஷன் தொகை, நிலத்துக்கு ஏற்ப, 1 லட்சம் முதல், 10 லட்சம்
ரூபாய்க்கு, 3 சதவீதம்; 11 லட்சம் முதல், 20 லட்சம் ரூபாய்க்கு, 2.75
சதவீதம்; 21 லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய்க்கு, 2.5 சதவீதம்; 51 லட்சம்
முதல், 75 லட்சம் ரூபாய் வரை, 2.25 சதவீதம்; 76 லட்சம் முதல், ஒரு கோடி
ரூபாய் வரை, 2 சதவீதம் வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது.
தொடர்ந்து
நிலத்தரகர்களுக்கு பத்திரப்பதிவுத்துறை சார்பில் அடையாள
எண்ணுடன் உரிமம்(லைசென்ஸ்) வழங்குதல்; தமிழக அமைப்புசாரா
தொழிலாளர்கள் நல பட்டியலில் இணைத்து தனி நல வாரியம் அமைத்து தருதல்;
மூத்த தரகர்களுக்கு மாதம், 3,000 ரூபாய்
ஓய்வூதியம் வழங்குதல்;
உரிய கமிஷன் தராமல் ஏமாற்றும் சம்பவங்கள் நடப்பதால், போலீஸ் துறையில்
இதுபோன்ற புகார்களை விசாரிக்க தனி பிரிவு தொடங்குதல் என்பன உள்பட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச்செயலர் மோகன்,
மாநில செயலர் வரதராஜன், பொருளாளர் வீரராகவன் உள்ளிட்ட முக்கிய
நிர்வாகிகள், மாநிலம் முழுதும் இருந்து, 200க்கும் மேற்பட்ட
நிலத்தரகர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
அணுக்கனிம சுரங்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு ஏன்; முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி
-
தினமும் ஒரு திருக்குறள் மனப்பாடம் மாணவர்களுக்கு ஏ.எஸ்.பி., அறிவுரை
-
ரூ 4.10 கோடியில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடம் திறப்பு
-
(பட்டம் வாங்கும் கல்லுாரி) கல்லுாரியில் தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி
-
திறன் மேம்பாட்டு பயிற்சி
-
பயனற்ற ரேஷன் கடையை அகற்றுங்க