மணிமுத்தாறு பாலத்தில் முதியவர் சடலம் மீட்பு

சேலம்:சேலம், மரவனேரி, திருமணிமுத்தாறு பாலத்துக்கு இடைப்பட்ட காலி இடத்தில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக, அஸ்தம்பட்டி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டதில், நாய்கள் கடித்து குதறியிருப்பது தெரிந்தது. அருகே, 50 மீட்டர் தொலைவில் ரயில்வே தண்டவாளம் இருப்பதால் ரயிலில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் என கருதி, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement