பாசன கால்வாயில் சிலாப்புகள் திருட்டு

மேலுார்: கள்ளந்திரி முதல் குறிச்சிபட்டி வரை முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன பகுதியாகும். இதில் புலிப்பட்டியில் இருந்து 11-வது பிரிவு கால்வாய் பிரிந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள திருவாதவூர் அலுவாண்டி கண்மாய் வரை செல்கிறது.

இக்கால்வாயின் இருபுறமும் நீர்வளத் துறையினர் சிலாப் அமைத்துள்ளனர். இதில் கல்லம்பட்டி பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிலாப்புகள் திருடப்பட்டிருந்தன. கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டால் கரை உடைந்து வயலுக்குள் பாய்ந்து பயிர்கள் அழியும் அபாயம் நிலவுகிறது. நீர்வளத் துறையினர் உடனடியாக ஆய்வு செய்து கரையை பலப்படுத்த வேண்டும். சிலாப் திருடர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement