ஒட்டன்சத்திரம் சர்வீஸ் ரோட்டில் பள்ளங்களால் விபத்து அபாயம்

ஒட்டன்சத்திரம், ஜூலை 1-

பள்ளங்களாக மாறிய ஒட்டன்சத்திரம், தாராபுரம் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் வாகனங்களை இயக்க சிரமப்படும் நிலை உள்ளது.

லெக்கையன்கோட்டையில் இருந்து பொள்ளாச்சிக்கு புதிதாக பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தாராபுரம் ரோட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் ரோட்டிற்கு செல்லவும், அங்கிருந்து பைபாஸ் ரோட்டுக்கு செல்லவும் சர்வீஸ் ரோடு உள்ளது.

இந்த பைபாஸ் ரோட்டில் டூவீலர்கள், டேங்கர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகம் செல்கின்றன. குறிப்பாக துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கோவை, திருப்பூருக்கு அதிக லாரிகள் செல்கின்றன.

இந்த இரண்டு சர்வீஸ் ரோடுகளும் அடிக்கடி சேதமடைகின்றன. ரோட்டில் அடுத்தடுத்து பெரிய பள்ளங்கள் எதிர்கொள்வதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. தாராபுரம் வழித்தடத்திற்கு செல்லும் ரோட்டில் பள்ளத்திற்கு முன் வேகத்தடை உள்ளது. இதனால் சேதமடைந்த பகுதி வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரிவதில்லை. இரவு நேரத்தில் விபத்து அபாயம் உள்ளது. சர்வீஸ் ரோடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement