இந்தியாவின் 4 நிறுவனங்கள் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்ததற்காக 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கம் செய்தது.
கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது போர் துவங்கிய ரஷ்யாவுக்கு நெருக்கடி தரும் விதமாக, அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைளை எடுத்தது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை மூலம், போருக்கு தேவையான ஆயுதங்களை ரஷ்யா வாங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
எனவே, அந்த நாட்டுடன் வர்த்தகத்தை செய்யக்கூடாது என்றும், மீறினால் அந்த நாடுகள் மீது கடுமையான வரிகளையும் அதிபர் டிரம்ப் விதித்து வந்தார். அந்த வகையில், 19 நிறுவனங்கள் மற்றும் இரண்டு தனிநபர்கள் உட்பட 21 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்ததற்காக 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கம் செய்தது. மத்திய அரசின் முயற்சியால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஆர்.ஆர்.ஜி. இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், லோகேஷ் மெஷின்ஸ் லிமிடெட், ஆமதாபாத்தைச் சேர்ந்த கேலக்ஸி பியரிங்ஸ் லிமிடெட் மற்றும் டில்லியைச் சேர்ந்த சௌர்யா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்
-
அணுக்கனிம சுரங்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு ஏன்; முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி
-
தினமும் ஒரு திருக்குறள் மனப்பாடம் மாணவர்களுக்கு ஏ.எஸ்.பி., அறிவுரை
-
ரூ 4.10 கோடியில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடம் திறப்பு
-
(பட்டம் வாங்கும் கல்லுாரி) கல்லுாரியில் தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி
-
திறன் மேம்பாட்டு பயிற்சி
-
பயனற்ற ரேஷன் கடையை அகற்றுங்க