பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; தர்மபுரி அக்சிதா முதலிடம்

2


நமது நிருபர்




பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (ஜூலை 01) உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். பட்டியலில் தர்மபுரி அக்சிதா முதலிடம் பிடித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் பிஇ படிப்புகளுக்கு 2 லட்சம் இடங்கள் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. அதன்படி, 2026ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நடந்தது.

இந்நிலையில் இன்று ஜூலை 1ம் தேதி பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தரவரிசை மதிப்பெண்களை அறியலாம். 1,30,767 பேர் மாணவர்கள், 1,05,246 பேர் மாணவிகள் என மொத்தம் 2,36,017 பேருக்கு தரவரிசை வெளியானது. 53 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் விஸ்வநாதன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ''இன்று வெளியான தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு கால அவகாசம் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை அணுகி, இது குறித்து தீர்வு காணலாம். தரவாிசை பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், பிரச்சனை இருந்தால் 6ம் தேதிக்குள் மாணவர்கள் அணுகலாம்'' என்றார்.



டாப் 3 யார்?




* தர்மபுரி அக்சிதா முதலிடம்

* திருப்பூர் ரோஹித் பாலன் இரண்டாம் இடம்

* நாமக்கல் வெங்கடகிருஷ்ணன் மூன்றாம் இடம்


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

இன்ஜினியரிங் ரேங்க் லிஸ்ட் வெளியீடு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்வும்

Advertisement