அமெரிக்காவில் தமிழ் அமைப்பு மாநாடு: ஜூலை 3ல் அண்ணாமலை, ஸ்ரீதர் வேம்பு சிறப்புரை
நமது நிருபர்
வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை (பெட்னா) சார்பில் ஜூலை 3ம் தேதி நியூ ஜெர்சியில் நடக்கும் தமிழ் விழாவில், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை, ஸோஹோ தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களை இணைக்கும் '' வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FETNA) வும் நியூ ஜெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து பேரவையின் 39 வது தமிழ் விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளன. நியூஜெர்சியில் உள்ள நியூஜெர்சி கன்வென்சன் மற்றும் எக்ஸ்போசிசன் மையத்தில் வரும் ஜூலை 2, 3, 4 ஆகிய நாட்களில் இவ்விழா நடக்க உள்ளது. தமிழகத்தை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனரான அண்ணாமலை ஜூலை 3ல் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்திய நேரப்படி 4ம் தேதி அதிகாலை இந்த நிகழ்வு நடக்கிறது. முன்னதாக, ஸோஹோ தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு உரை நிகழ்த்துகிறார்.
ஜூலை 2ல் விழா நிகழ்ச்சி
* தமிழ்த்தாய் வாழ்த்து
* குத்து விளக்கு ஏற்றுதல்
* வரவேற்புரை- ஶ்ரீலெட்சுமி கல்யாணசுந்தரம் தலைவர் - பேரவை பன்னாட்டுத் திரைப்பட விழா
* வரவேற்புரை- விஜய் மணிவேல் தலைவர் - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
* உரை- பேரவை விழா ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் ரெங்கநாதன்
* இயக்குனர் இமயம் பாரதிராஜா, பாக்யராஜ் மறைவுக்கு நினைவஞ்சலி
* கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு - சிறப்பு நிகழ்ச்சி
* பேரவை குறும்பட விருதுகள்
* இசையும், நடனமும் - இன்னிசை நடன நிகழ்ச்சி
* பேரவை குறும்பட விருதுகள்
* பேரவை திரைப்பட விருதுகள்
* பேரவை திரைப்பட சாதனையாளர் விருதுகள்
* கலந்துரையாடல்
* பேரவை மக்கள் தேர்வு விருதுகள்
* பேரவை மக்கள் தேர்வு விருதுகள்
* நன்றியுரை : பேரவை பன்னாட்டு திரைப்பட விழா குழுவினர்
ஜூலை 3ம் தேதி
* தமிழ்த்தாய் வாழ்த்து
* அமெரிக்க தேசிய கீதம்
* மங்கல இசை
* குத்து விளக்கு ஏற்றுதல்
* வரவேற்புரை; விஜய் மணிவேல் தலைவர் - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
* வரவேற்புரை; சக்தி பிச்சைமணி தலைவர் - நியூசெர்சி தமிழ்ப் பேரவை
* உரை; பேரவை விழா ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் ரங்கநாதன்
* ஒரு சிற்பியும் - இராசேந்திர சோழனும் : ஒரு காலப்பயணியின் சோழ தரிசனம்
* சிலம்பின் வரலாறும் கடல்கடந்த தமிழ் முழக்கமும்
* அறத்தின் கொண்டாட்டம் — திருக்குறள் மற்றும் ஆத்திசூடியின் கவித்துவக் கூடல்
* ஈழத்தில் எமது பொழுதுகள் - நாடகம்
* பாண்டியர் வரலாறு — தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
* தமிழ்க் கல்வியின் சிறப்பு — நாடகம்
* புயல் தாண்டிய விடியல் — நடனம்
* ஆளப்போறான் தமிழன் — நடனம்
* திரை நட்சத்திர நேரம் - திரை ஆளுமைகளின் சிறப்பு நிகழ்ச்சி
* "அமெரிக்கத் தமிழர் முன்னோடிகள்" விருதுகள்
சிறப்பு விருந்தினர்களின் உரை
* முருகானந்தம்— உலக சமுதாய சேவா சங்கம்
* ஶ்ரீதர் வேம்பு — நிறுவனத் தலைவர், ஸோகோ நிறுவனம்
* கே.சி.வீரமணி
* தமிழ்மொழி வளர்ச்சியும், தமிழர் பண்பாடும் : கோ. விசுவநாதன்- வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர்
* அன்புமணி ராமதாஸ் - வாழ்த்து காணொளி
* அண்ணாமலை - சமூக செயற்பாட்டாளர்
* பேரவை விழாவிற்கு உழைத்த தன்னார்வலர்களை பாராட்டும் நேரம்
* தெருக்கூத்து : கடாரம் வென்ற சோழப் பேரரசன் — இராசேந்திர சோழன்
ஜூலை 4ம் தேதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்
விழாக்குழு!
பேரவையின் 39வது தமிழ் விழாக் குழுவினர் விபரம் பின்வருமாறு:
* சசிகுமார் ரங்கநாதன், விழா ஒருங்கிணைப்பாளர், நியூ செர்சி தமிழ்ப்பேரவை
* உதயகுமார் கிருட்டிணமூர்த்தி- இணை ஒருங்கிணைப்பாளர், நியூ செர்சி தமிழ்ப்பேரவை
* கருப்பையா கணேசன்- இணை ஒருங்கிணைப்பாளர், நியூ செர்சி தமிழ்ப்பேரவை
* செந்தில்வாசன் சீனிவாசன்- இணை ஒருங்கிணைப்பாளர், நியூ செர்சி தமிழ்ப்பேரவை
* சின்னசாமி பாப்பனன்- ஒருங்கிணைப்பாளர், தொழில் முனைவோர் மாநாடு
* சாந்தி தங்கராசு- இணை ஒருங்கிணைப்பாளர், தொழில்முனைவோர் மாநாடு
* சசிதரன் செல்லதுரை- துணை ஒருங்கிணைப்பாளர், இலங்கை தமிழ்ச்சங்கம்
* குமரப்பன் அண்ணாமலை- துணை ஒருங்கிணைப்பாளர், நியூயார்க் தமிழ்ச்சங்கம்
* பிரபு ராமகிருட்டிணன்- துணை ஒருங்கிணைப்பாளர், கனெக்டிக்ட் தமிழ்ச்சங்கம்
* வாசுதேவன் வரதராசன்- துணை ஒருங்கிணைப்பாளர், பெருநில தமிழ்ச்சங்கம்.
பிரதமர் மோடி வாழ்த்து
இம்மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA) ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு குறித்த செய்தியை அறிந்தது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் கனடா முழுவதிலுமிருந்து தமிழ்ச் சமூகத்தினர் பங்கேற்பது மிகவும் நெகிழ்ச்சியூட்டுகிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்மாநாடு தமிழ்ச் சமூகத்தின் செழுமையான பாரம்பரியம், கலாசாரம் மற்றும் மொழியைக் கொண்டாடுகிறது.அத்தோடு, தமிழர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கவும், கலை, இலக்கியம் மற்றும் மரபுகளை மேம்படுத்தவும் ஒரு துடிப்பான உலகளாவிய தளமாகத் திகழ்கிறது.
தமிழ்ச் சமூகத்தினர், பொருளாதாரம், கல்வி மற்றும் சமூகநலன் சார்ந்த துறைகளில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தி, உலகளவில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர்.
உலகின் மிகப் பழமையான மற்றும் இன்றும் பயன்பாட்டில் உள்ள மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது.
தமிழ் மொழி, மிகச் சிறந்த இலக்கிய மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் பெருமை. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் ஊக்கப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கும் பரப்புவதற்கும் உலகம் முழுவதும் 'திருவள்ளுவர் மையங்கள்' அமைக்கப்படுவது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வுடன் சேர்ந்து "தமிழ் கற்போம் - தமிழ் கற்கலாம்" (Learn Tamil - Tamil Karakalam) என்ற மையக்கருத்தின் கீழ் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தமிழ் மொழியை மக்களிடையே கொண்டு சேர்ப்பதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ளும்போது, FeTNA போன்ற அமைப்புகளின் பங்கும் பங்களிப்பும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இம்மாநாடு துடிப்பான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் வழிவகுத்து, இளைய தலைமுறையினர் தங்கள் முந்தைய உறவுகளுடன் இணைய ஊக்கமளிப்பதாக அமையட்டும். இம்மாநாடு முழுமையான வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
உலக தமிழ் அமைப்புக்கு முதல்வர் போகாதது ஏன் ?. இவர் என்ன தமிழர்களின் பிரதிநிதியா?
கில்லி விஜய் மாதிரி சிங்கிளா ஏறி அடிப்பார்னு பார்த்தா வடிவேலு மாதிரி சிங்கமுத்து, அல்வா வாசு, குள்ளமணி, போண்டாமணி இவங்கள கூட கூட்டிக்கிட்டுல்ல திரியுறாரு?
சந்திரா உனக்கு படிப்பறிவு கம்மியோ
ஆமாங்க! உங்க அளவுக்கு நான் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடில படிக்கலீங்க!
அண்ணாமலை இயக்கம் வலுவரட்டும் மாடு முழுவதும் ஆதரவு கிடைக்கட்டும்மேலும்
-
இந்திய அணிக்கு வெண்கலம் * ஆசிய யூத் டேபிள் டென்னிசில்
-
காலிறுதியில் இந்திய ஜோடி * யு.எஸ்., ஸ்மாஷ் டேபிள் டென்னிசில்
-
சர்வதேச இந்திய கைப்பந்து போட்டிக்கு விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
-
அன்னாபிஷேகம்
-
உவ்வே... கழிப்பறைகளுக்கு அபராதம்: கமிஷனர் உத்தரவு
-
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்