அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கும் தனி நபர்கள்; டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., புகார்
சென்னை: 'அரசின் ரகசிய தகவல்களை, ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பெறுவது குற்றச்செயல் என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., அமைப்புச் செயலர் பாரதி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'இ - மெயில்' வாயிலாக அளிக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய தனி நபர்கள், முதல்வர் விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டங்கள், அதிகாரப்பூர்வ ஆய்வு கூட்டங்கள், பிற ரகசிய ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
மாநிலத்தின் மிக உயர்ந்த பொறுப்பை வகிக்கும் முதல்வர், இந்திய அரசியமைப்பு சட்டத்தின் கீழ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்திருப்பவர். அமைச்சரவை நடவடிக்கைகள், அரசின் முக்கிய தகவல்களின் ரகசியத்தை பாதுகாப்பது, அவரின் சட்டப்பூர்வ கடமை.
ஊடகங்களில் வெளியான தகவலின்படி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், முதல்வரின் நெருங்கிய உதவியாளர்களாக கூறப்படும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர், தொடர்ந்து அமைச்சரவை கூட்டங்கள், அதிகாரப்பூர்வ ஆய்வு கூட்டங்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் நடக்கும் உயர்மட்ட அரசு ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
இருவரும் அரசு பணியாளர்களா அல்லது தமிழக அரசின் பணிச்சட்ட விதிகளின் கீழ், ரகசிய அரசு நடவடிக்கையில் பங்கேற்க தகுதி உடையவர்களா என, கேள்வி எழுகிறது. ரகசிய தகவல்களை பெறுவது உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதுக்குத்தான் இது...? வாலை விட்டு ஆழம் பார்க்குறது...ன்னு சொல்லுவாங்கல்ல... அதுதான் இது. டிஜிபி உடனே நடவடிக்கை எடுப்பாரா...? எடுக்கமாட்டார்... இவங்க நேரா “ஜட்ஜ் அய்யா... அநியாயம் நடக்குது... நாங்க புகார் கொடுத்தோம், இதோ அந்த ரசீது... கிணத்தை காணோம்..னு ஜட்ஜ் அய்யாகிட்ட போய் நிப்பாக...? அதுக்குத்தான்யா இது...? 40 வருஷமா... டான்சி கேஸ், சொத்துகுவிப்பு வழக்கு...ன்னு இப்படித்தான்யா... வாலை விட்டு ஆழம் பார்க்கும் குரங்கு போல... ஆழம் பார்க்குது...?
அரசின் ரகசிய கூட்டங்களுக்கு தெலுங்கர்கள் ஏன் கலந்துகொள்கிறார்கள்? விஜய் தமிழ்நாட்டு அரசை சினிமாபோல் நடத்துவதாக தோன்றுகிறது.
திமுக புகாரில் உண்மை இருக்குமானால், திரு. விஜய். பதவிப் பிரமாணம் எடுத்ததும், ரகசிய காப்பு பிரமாணம் எடுத்ததும் பொய் என ஆகிவிடும்.
உண்மையை எந்த நடுநிலை அமைப்பு வெளிக் கொண்டு வரும்??. சத்தியமாக தமிழ்நாட்டில் உள்ள அதிமுக ,இண்டி கட்சி, லாட்டரி ஊக்கத்தொகை பெறும் முதுகெலும்பற்ற ஊடகங்கள் இதைப் பற்றி பேசாது, எழுதாது....நல்ல நாதசுர பார்ட்டிகள் போல ஒத்து தான் ஊதும்
ஆக தவெக வும் தாம் விடியலில் பிறந்த
கட்சி, இண்டி கூட்டணியின் சாதக பட்சி என்பதை தெளிவு படுத்திவிட்ட படியால்
இனி பேசி பிரயோசனமில்லை. தமிழ்நாட்டைப்பிடித்த கேடுகள்
ஆம், நீங்கள் சொல்வது சரிதான். அப்படியானால் ஸ்டாலின் தனது பதவியை இழக்க வேண்டும். ஏனெனில், அவரது மருமகன் சபரீசனும், உதவியாளர் ரமேஷும் எப்போதும் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Kchandra Sekaran சென்ற எடப்பாடி ஆட்சியில் திமுக மிகத் தீவிரமான எதிர்கட்சியாக செயல்பட்டது. தினசரி போராட்டங்கள், வழக்குகள், பத்திரிக்கை வாயிலாக ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை தீவிரமாக பரப்புதல் மற்றும் தொடர் போராட்டங்கள் என தம் கட்சித் தொண்டர்களை உயிர்ப்புடன் வைத்திருந்தது.
ஆனால் திமுக ஆட்சி வந்த உடன் எடப்பாடி நேர் எதிர்மறை,போராட்டமோ எதிர்ப்போ ஏதும் இல்லை.
இதோ ஆட்சியை விட்டு இறங்கியதும் திமுக பழையபடி தவெக அரசு எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரமாக கையிலெடுத்துவிட்டது. உதாரணம் ஒரு அமைச்சர் மாத்திரையை தூள் செய்த விவகாரத்தை எப்படி ஊதி ஊதி பெருசாக்கி நடுத்தெரு போராட்டம் வரை வந்துவிட்டார்கள். இதே கள்ளக் குறிச்சி 63 மரணம் பேச எதிர்கட்சியில் ஆள் இல்லை. 10 லட்சம் கொடுத்ததை யார் வீட்டுப் பணம் என விமர்ச்சித்தார்களே ஒழிய அதைத் தாண்டி ஒன்றும் வேகம் இல்லை.
இப்போதும் அதிமுக தம் கட்சி கரைவதை தடுக்கக் கூட திராணியற்று விழிபிதுங்கி நிற்கிறது. இந்த நிலையில் அதால்பெப்படி தவெக எதிர்பு அரசியல் மற்றும் போராட்டங்கள் செய்ய இயலும்.
கூவல்திலகம் பாரதியை உள்ளே தள்ளினாலே அரசுக்கு பாதிக்கு மேல் பிரச்சினைகள் குறையும்.
ஏதாவது புகார் சொல்லலைன்னா திமுகவுக்கு தூக்கமே வராது போல. தங்கள் ஆட்சியில் ஒரு டிஜிபி யை கூட நியமிக்க துப்பில்லாத கூட்டம் இப்போது விஜய் அரசு மீது தும்மல் போட்டாங்கன்னு கூட புகார் சொல்லுவாங்க போல . காமெடி கூட்டம் திமுக
அமைச்சரவை கூட்டத்தில் தனி நபர் பங்கேற்பு பற்றிய புகார் பெற சபாநாயகர், தேர்தல் ஆணையம் மற்றும் கவர்னர். தன் கீழ் உள்ள போலீஸ் அதிகாரிகள் மீது புகார் இருந்தால் டி ஜி பி. சட்ட விதி மீறல் இருந்தால் நீதிமன்றம்.
இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடுக்கலாமே..
செந்தில் குமார் ஜட்ஜ் ஐயா அவர்கள் அமர்வில் விசாரிக்கணும். அது அப்போது நடந்தது. இப்போது நடக்குமா?
இதில் A D சேரனும்