ஒப்பந்தம் பெற பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்; அமைச்சர் ஆதவ் அறிவிப்பு
சென்னை: கடந்த ஆட்சியில் லஞ்சம் கொடுத்து ஏமாந்த ஒப்பந்ததாரர்கள் புகார் தரலாம் என அமைச்சர் ஆதவ் அறிவித்தார்.
அவரது அறிக்கை: தமிழக அரசின் நிர்வாகம் மிக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சிகளில் தமிழக அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் மையப்படுத்தப்பட்ட ஊழல்கள், திட்டமிடப்பட்ட விதிமீறல்கள், நிர்ணயிக்கப்பட்ட லஞ்சத்தொகை எனப்பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் ஒப்பந்ததாரர்களை அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களின் குடும்ப உறவுகள், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் எனப் பலரிடமும் ஒப்பந்தம் தருவதாக வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கியுள்ளனர்.
பலரிடம் பணத்தையும் பெற்றுக் கொண்டு முறையாக வேலைகளையும் ஒதுக்காமல், ஒப்பந்ததாரர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். இது தொடர்பான பல புகார்கள் தற்போது எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. மேலும், இதுபோல் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், என்னிடம் அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுக்கலாம். என்னிடம் நேரடியாகவோ அல்லது minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சலிலோ புகார் தெரிவிக்கலாம்.
புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய விபரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்குத் தேவையான சட்ட பாதுகாப்பும் வழங்கப்படும். விரைவில் அவர்கள் இழந்த பணத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில், இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது. ஒப்பந்தங்கள் அனைத்தும் நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறும். இவ்வாறு அமைச்சர் ஆதவ் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுப்பதும் தவறு, பெறுவதும் தவறு வரதட்சணை மாதிரி. முதலில் கம்பிளைன்ட் கொடுக்கிறவன் ஜெயிலில் இருக்க வேண்டும்.
லாட்டரியில் ஏமாந்தவர்களும் புகார்கள் கொடுக்கலாமா
இதையெல்லாம் யார் சொல்லணும்னு ஒரு விவஸ்தை இல்லையா . ஹூம் ,இன்னும் என்னென்ன பார்க்கணுமோ .
நேர்மையான அரசியல்வாதிகள் தூய மனுதுடன் ஆட்சியில் அமர்ந்த ஓமந்தூரார் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி குமாரசாமி ராஜா காமராஜ் பக்தவச்சலம் இவர்களுக்கு பிறகு எம் ஜி ராமச்சந்திரன் தவிர்த்து நல்ல ஆட்சியாளர் தமிழகம் பெறவில்லை. இப்படி ஒருவர் கிடைக்கும்போது ஊழல் பட்டியல் கொடுத்தால் உண்மையில் தண்டனை கிடைக்கும். நல்லவர்கள் மனசில் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற எண்ணம் இருக்கும்வரை இனியும் பிறகும் குழந்தைகள் இப்படித்தான் எண்ணும் அரசு பணியில் இருக்கும் நல்ல ஊழியர்கள் பாவம் நிலை தடுமாறுகிறார்கள் உண்மை கூற
திமுகவின் அயோக்கியதனங்களை நிருபிக்க, லஞ்சம் கொடுத்து மன வேதனை அடைந்தவர்கள் ஆதாரங்களுடன் புகார் தந்தால் தண்டனை கிடையாது என்று சொல்லுங்க. வாய்ச்சவடால் திமுகவினரால் அப்படி செய்ய வருபவர்களுக்கு அரசு பாதுகாப்பு தரணும், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று உத்திரவாதம் தரணும்.
விவரம் ரகசியமாக வைக்கத் தேவையில்லை. லஞ்சம் கொடுப்பதும் தவறு தான். எனவே கம்பளைண்ட் கொடுப்பதும் ஜெயில் தண்டனை பெற தகுந்தவனே.