தீ தடுப்பு மீட்பு பயிற்சி

தேவகோட்டை:தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் நாட்டு நலப் பணிகள் திட்டத்தின் கீழ் தீயணைப்பு துறை மீட்பு பணி குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. முதல்வர் கண்ணன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு முறைகள் பற்றியும்,சம்பவங்களின் போது மீட்பு நடவடிக்கை பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். நாட்டு நல பணி திட்ட அலுவலர்களான திசாந்த்குமார், காசி விஸ்வநாதன், சுரேகா, கவிதா, விஜயபிரசாத் வழி நடத்தினர்.

Advertisement