துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி; கட்சிக் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு
சென்னை: துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைவதாக அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏ லீமா ரோஸ், வளர்மதி, காளியம்மாள் உள்ளிட்ட பெண் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சி பணிகளில் மகளிரின் பங்கு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளிடையே இபிஎஸ் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது; அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து சிலர் கட்சியில் இணைக்கின்றனர். தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கின்றனர். அரை நூற்றாண்டு கண்ட அதிமுகவை அழித்து விடலாம் என்று நினைத்தால், அது யாராலும் முடியாது, இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
* மின்வெட்டு ஏற்படுவதைக் கண்டித்து தீர்மானம்
* இடைத்தேர்தலுக்கு தயாராவோம் எனத் தீர்மானம்
* பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை தவெக அரசு தடுக்கத் தவறியதைக் கண்டித்து தீர்மானம்
* அரசு கல்லூரி உதவி பேராசிரியர் முறைகேடு புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்
இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தால் கடைசியில் நீரும் உமது குடும்பத்தினரும் தான் அண்ணா தி மு க வில் இருப்பீர்
கொர்ர்
ஆம்
தொலயட்டும்மேலும்
-
அணுக்கனிம சுரங்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு ஏன்; முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி
-
தினமும் ஒரு திருக்குறள் மனப்பாடம் மாணவர்களுக்கு ஏ.எஸ்.பி., அறிவுரை
-
ரூ 4.10 கோடியில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடம் திறப்பு
-
(பட்டம் வாங்கும் கல்லுாரி) கல்லுாரியில் தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி
-
திறன் மேம்பாட்டு பயிற்சி
-
பயனற்ற ரேஷன் கடையை அகற்றுங்க