எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் மாணவியருக்கு வரவேற்பு

திருப்பூர், ஜூலை 2–

திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் புதிதாக இணைந்துள்ள முதலாம் ஆண்டு மாணவியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கல்லுாரி முதல்வர் தமிழ்மலர் தலைமை வகித்து பேசுகையில், ‘‘உயர்கல்வியின் முக்கியத்துவம், ஒழுக்கம், கல்விசார் முன்னேற்றம், இப்போதிருந்தே மாணவியர் சாதிக்க தயாராக வேண்டும்,’’ என்றார். முன்னதாக, முதன்முறை கல்லுாரிக்கு வந்த மாணவியருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்பு வழங்கப்பட்டது.

வணிகவியல் துறை முன்னாள் பேராசிரியர் நாகானந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உயர்கல்வியில் வெற்றி பெற தேவையான திறன்கள், தன்னம்பிக்கை, நேர மேலாண்மை, நல்ல பண்புகள் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் குறித்து பேசினார். முன்னதாக, இயற்பியல் துறைத் தலைவர் (பொறுப்பு) ராஜேந்திரன் வரவேற்றார். கணினி அறிவியல் துறைத் தலைவர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Advertisement