பள்ளி பராளுமன்ற தேர்தல்: மாணவ, மாணவியர் ஆர்வம்

பெருமாநல்லுார்: பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியில், 2026-2027ம் கல்வியாண்டுக்கான 'பள்ளி பாராளுமன்றத்துக்கான மாணவ, மாணவியர் தேர்தல், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு வாயிலாக நடத்தப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி தலைமை மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு, பதவியேற்பு விழாவுடன் பள்ளியில் செயல்படும் கல்விசார் மன்றங்களின் துவக்க விழாவும் நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி தலைவர் சண்முகம், லோகநாயகி ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி தாளாளர் மனோகரன், மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் பள்ளியின் நோக்கம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக, பெருமாநல்லுார் எஸ்.ஐ., பிரசன்னா பங்கேற்று, பேசுகையில்,''கல்வியுடன் சேர்ந்து, விளையாட்டு, உடல் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்'' என்றார்.

பள்ளி தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா பேசுகையில்,''மாணவர் பாராளுமன்றம் ஒவ்வொரு வாரமும் நடக்கும். அதில் மாணவர்களின் செயல்பாடுகள், தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, மாணவர்களின் வசதிகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படும்,'' என்றார். பள்ளி முதல்வர் லதா, தலைமையாசிரியை பிரேமலதா ஆகியோர் பேசினர்.

Advertisement