விரிவாக்க பகுதிகளில் திட்ட அனுமதி சி.எம்.டி.ஏ.,வுக்கு மாற்றுவதில் தாமதம்
சென்னை: அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால், சென்னை பெருநகர் விரிவாக்க பகுதிகளில் கட்டட அனுமதி வழங்கும் அதிகாரத்தை, சி.எம்.டி.ஏ.,வுக்கு மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர் பகுதி தற்போது, 1,189 சதுர கி.மீ., என்ற அளவில் உள்ளது. இந்த பரப்பளவை, 5,904 சதுர கி.மீ., அளவில் விரிவாக்கம் செய்யும் பணிகள், 2018ல் தொடங்கின.
இதன்படி, திருவள்ளூர் மாவட்டம் முழுதும் விரிவாக்கத்தில் வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாலாறு வரையிலான பகுதிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் தாலுகா வரையிலான பகுதிகளை, சி.எம்.டி.ஏ.,வில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அரசாணை, 2023ல் பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணைப்படி, விரிவாக்க பகுதிகளும், அப்பகுதிகளுக்கான கட்டட அனுமதி அதிகாரமும், சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால், வீட்டுவசதி துறை அதிகாரிகள் மத்தியில், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால், சி.எம்.டி.ஏ., விரிவாக்க பகுதிகள் சார்ந்த அனைத்து பணிகளும், கடந்த ஆட்சிக்காலத்தில் கிடப்பில் போடப்பட்டன.
இது தொடர்பாக, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
சென்னை பெருநகர் பகுதியை விரிவாக்கம் செய்வதில், கடந்த ஆட்சிக்காலத்தில் சுறுசுறுப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கட்டட அனுமதி அதிகாரத்தை சி.எம்.டி.ஏ.,வுக்கு மாற்றும் நிலையில், அதிகாரிகளின் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அனைத்தும் நின்று விட்டன.
எனவே, தற்போது வந்துள்ள புதிய அரசு, விரிவாக்க பகுதிகளில் கட்டட அனுமதி அதிகாரத்தை சி.எம்.டி.ஏ.,வுக்கு மாற்ற வேண்டும். இதற்காக, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர் பகுதிகளில் சி.எம்.டி.ஏ.,வின் மண்டல அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இது தொடர்பான விரிவான அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கோப்புகள் தற்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஆய்வில் உள்ளது. விரைவில் இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4 பவுன் திருடிய மர்ம கும்பல்
-
பாலார்பதி போஸ்ட் ஆபீஸ் வேறு பகுதிக்கு மாற்றப்படுமா?
-
மின் கம்பத்தில் மோதிய லாரி சென்னிமலையில் பரபரப்பு
-
முதல் நாளில் 7,050 கால்நடைகளுக்கு செலுத்தப்பட்ட கோமாரி நோய் தடுப்பூசி
-
நாய்களை கட்டுப்படுத்த ஆணையர் அறிவுறுத்தல்
-
முனியப்ப சுவாமி கோவிலில் திருப்பணி ஆலோசனை கூட்டம்