சைக்கிளிங் போட்டி பங்கேற்க அழைப்பு

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சைக்கிளின் அசோசியேஷன் சார்பில், சைக்கிளிங் போட்டி, வரும், 5 ம் தேதி சைக்கிளிங் போட்டி நடக்கிறது.

திருப்பூர், கோவில்வழி, பிரன்ட்லைன் பள்ளி முன் துவங்கும் இந்த போட்டியில், 14, 16, 18, 23 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு, பொதுப்பிரிவினர் பங்கேற்கலாம். முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 96005 99499, 95149 22085 என்ற எண்ணில் அழைக்கலாம் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement