இந்த வாரம் ஒசைரி நுால் விலையில்... மாற்றமில்லை! வாராந்திர விலை நிர்ணயம் திட்டவட்டம்
திருப்பூர்: பருத்தி நுால் (ஒசைரி) விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ள நுாற்பாலைகள், வாரம் தோறும் திங்கட்கிழமை விலை நிர்ணயம் செய்யப்படும் என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் நேரடி கண்காணிப்பு இல்லாததாலும், இந்திய பருத்திக்கழகம் ஒரு தலைபட்சமாகவும் செயல்படுவதால், உள்நாட்டு பஞ்சு தேவை பூர்த்தி செய்வது கேள்விக்குறியாக மாறியுள்ளது. விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இயங்கும் இந்திய பருத்திக்கழகம், பருத்தி பஞ்சு விற்பனையில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறது.
பஞ்சுக்கு ஒரு சதவீதம் கூட சம்பந்தமே இல்லாத நிறுவனங்கள் கூட பஞ்சை வாங்கி இருப்பு வைக்கலாம்; விலை உயரச்செய்து பிறகு கொள்ளை லாபம் ஈட்டலாம் என்பது தற்போது நடைமுறையாக மாறிவிட்டது. காரணம், சி.சி.ஐ., பஞ்சு விற்பனையில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாததுதான். மத்திய அரசிடம், டிச., மாதத்தில் இருந்தே, பஞ்சு இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டுமென, தொழில்துறையினர் வலியுறுத்தி வந்தனர்.மாறாக, ஐந்து மாதங்களுக்கு பிறகுதான், கோரிக்கை நிறைவேறியது. கடந்த ஒரு மாதமாக, பஞ்சு இறக்குமதிக்கான வரியில் விலக்கு அளிக்கப்பட்டாலும், உடனடி பயனளிப்பதாக இல்லை.
வெளிநாடுகளில் பஞ்சு வாங்கி எடுத்து வர, 45 நாட்களாகி விடும். எனவேதான், டிச., மாதத்தில் இருந்து வரிவிலக்கு வேண்டுமென கேட்டனர். வரியை ரத்து செய்த பின்னரும், பஞ்சு விலை ஏற்ற, இறக்கம் தொடர்கிறது. நேற்றைய நிலவரப்படி, ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, 68 ஆயிரம் ரூபாய். கடந்த ஒரு வாரத்தில், பஞ்சு விலையில் பெரிய மாறுதல் இல்லாததால் நுால்விலையிலும் மாற்றம் இல்லையென நுாற்பாலைகள் தெரிவித்துள்ளன.
வாரந்தோறும் திங்கள்
இதுகுறித்து ஒசைரி நுால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'பஞ்சு விலை சீராக இருந்தாலும், தட்டுபபாடின்றி கிடைத்தாலும், நுால் விலை சீராக இருக்கும். பஞ்சு விலை உயர்வுக்கு ஏற்ப நுால் விலை உயர்த்தப்பட்டது. அதன்பின், குறைக்கப்பட்டது. இவ்வாரத்தில், நுால்விலையில் பெரிய மாற்றம் இல்லை. பஞ்சு விலை நிலையாக இருக்காது என்பதால், நஷ்டத்தை தவிர்க்க, வாரம் தோறும், நுால் விலை நிர்ணயம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்படி, திங்கட்கிழமை தோறும் நுால்விலை நிர்ணயம் செய்யப்படும்,' என்றனர்.
@block_B@ 2 மாதத்துக்கு ஒரு முறை... வாராந்திர நுால் விலை நிர்ணயம் என்பது, பின்னலாடை தொழிலுக்கு ஏற்புடையதாக இருக்காது. பஞ்சு விலையை நிலையாக வைக்க, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். வாரந்தோறும் நுால் விலை உயர்ந்தால், ஏற்றுமதி ஆர்டர்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். பின்னலாடை உற்பத்தியில், நுால் பிரதானமானது. எனவே, மத்திய அரசு பஞ்சு மற்றும் நுால் விலையை சீராக வைத்திருக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு, மீண்டும் இதுதொடர்பாக மத்திய, மாநில அமைச்சர்களிடம் பேசி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நுால் விலை நிர்ணயம் செய்ய உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். - பின்னலாடை உற்பத்தியாளர்கள்block_B
மேலும்
-
ரூ.169 கோடி வங்கி நிதி மோசடி: ஓய்வு பெறும் நாளில் ஐ.ஏ.எஸ்., கைது
-
விரிவாக்க பகுதிகளில் திட்ட அனுமதி சி.எம்.டி.ஏ.,வுக்கு மாற்றுவதில் தாமதம்
-
வியாபாரியை கடத்தி நிர்வாணமாக்கி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியோர் கைது
-
போராட்ட குணமும் துணிச்சலும் அனைத்தையும் சாதிக்கும்!
-
மருத்துவமனையில் தீ நோயாளிகள் ஓட்டம்
-
குடும்ப தகராறில் தீக்குளித்த 'பெண் சீரியஸ்'