பாலார்பதி போஸ்ட் ஆபீஸ் வேறு பகுதிக்கு மாற்றப்படுமா?
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பாலார்பதி போஸ்ட் ஆபீசை முத்துக்கவுண்டனூர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாலார்பதி கிராமத்தில் போஸ்ட் ஆபீஸ் பல ஆண்டுகளாக செயல்படுகிறது. ஆனால், பாலார்பதி மக்களை காட்டிலும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்களே போஸ்ட் ஆபீஸில் அதிக அளவில் கணக்கு வைத்துள்ளனர்.
போஸ்ட் ஆபீஸ் வரும் மக்கள் பலர், பஸ் போக்குவரத்தை பயன்படுத்துவதால், வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மக்கள் எளிமையாக வந்து செல்லும் வழியில் போக்குவரத்து வசதி உள்ளிட்டவைகளை கவனித்து, வேறு இடத்திற்கு போஸ்ட் ஆபீசை மாற்றம் செய்ய வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மக்கள் கூறியதாவது:
போஸ்ட் ஆபீஸில், கூலி தொழிலாளர்கள் பலர் கணக்கு வைத்துள்ளனர். ஒரு நாள் வேலையை விட்டு பாலார்பதி கிராமத்துக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், முத்துக்கவுண்டனூர் பகுதியில் இயங்கி வந்த பி.எஸ்.என்.எல்., அலுவலகம் உபயோகப்படுத்தப்படாமல் புதர் மண்டி காணப்படுகிறது.
இந்த அலுவலகத்தை தூய்மைப்படுத்தி, போஸ்ட் ஆபீஸ் துவங்கினால் மக்கள் எளிதாக வந்து செல்லலாம். எனவே, பாலார்பதி போஸ்ட் ஆபிஸை உடனடியாக முத்துக்கவுண்டனுாருக்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
மேலும்
-
விலா குருத்தெலும்பின் மூலம் காது மறுசீரமைப்பு
-
மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த அனைத்து கட்சிகளையும் திரட்ட வேண்டும்; அன்புமணி பேட்டி
-
எமனேஸ்வரம் மார்க்கெட் தெருவில் ஓடும் கழிவுநீர்: வியாபாரிகள், மக்கள் அவதி
-
போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
-
போலீசார் தாக்கியதாக வாலிபர் புகார்
-
பெரியாறு புலிகள் காப்பகத்தில் யானை தாக்கி வனக்காவலர் காயம்