ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4 பவுன் திருடிய மர்ம கும்பல்
ஈரோடு:ஈரோட்டில், அரசு டவுன் பஸ்சில் மூதாட்டி கழுத்தில் இருந்த, 4 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
சித்தோடு
கரட்டுப்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி மனைவி ராஜாமணி, 67. இவருக்கு 2
மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ராஜாமணி, 2 நாட்களுக்கு முன்பு ஈரோடு
சாந்தான்கருக்கு பகுதியில் வசிக்கும் மகள் வீட்டிற்கு வந்துள்ளார்.
திண்டல்
பகுதியில் ராஜாமணியின் உறவினர் வீட்டு, துக்க நிகழ்வுக்கு
செல்வதற்காக நேற்று காலை, 11:30 மணியளவில் ஈரோட்டில் இருந்து
பெருந்துறை வரை செல்லும் அரசு டவுன் பஸ் நம்பர், 12ல் ஈரோடு ஜி.ஹெச்.
பஸ் ஸ்டாப்பில் ஏறி பயணித்துள்ளார்.
பஸ்சில் கூட்டம் அதிகமாக
இருந்தது. காலிங்கராயன் விருந்தினர் மாளிகை அருகே சென்றபோது, ராஜாமணி
கழுத்தில் அணிந்திருந்த, 4 பவுன் செயின் இல்லாததை உணர்ந்தார். தேடி
பார்த்தும் கிடைக்காததால் கூச்சலிட்டுள்ளார். மர்ம நபர்கள் செயின்
பறித்ததை உறுதி செய்தார்.
ராஜாமணி அளித்த புகார்படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.