முனியப்ப சுவாமி கோவிலில் திருப்பணி ஆலோசனை கூட்டம்

ஈரோடு:ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள, முனியப்ப சுவாமி கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா கோவிலின் செயல் அலுவலர் சுரேந்தர் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்வது, உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு, அரசு ஒப்புதல் பெறுவது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து
ஆலோசிக்கப்பட்டது.

Advertisement