ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் காலிப் பணியிடம்... அறிவிப்பு: தொகுப்பூதியத்தில் மேலாண்மைக்குழு நிரப்ப ஆணை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக தொகுப்பூதியத்தில் நிரப்ப ஆணை வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் செயல்படும் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்த பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்ப ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம் மூலம் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் கவரை பள்ளியில் 3 காலிப்பணியிடங்களும் (கணிதம் மற்றும் கணினி அறிவியல், பொருளியல்), கொந்தமூர் பள்ளியில் 4 (வணிகவியல், ஆங்கிலம், கணினி அறிவியல்-2), புளிச்சப்பள்ளத்தில் 2 (வணிகவியல், பொருளியல்), சிங்கனுார் 2 (வணிகவியல், கணினி அறிவியல்), வழுதரெட்டி 2 (கணிதம், தாவரவியல்) என மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் புளிச்சப்பள்ளம் பள்ளியில் 1 (அறிவியல்), கப்பூர் 1 (தமிழ்), பொம்பூர் 2 (அறிவியல், சமூக அறிவியல்), கொடுக்கூர் 1 (கணிதம்), ராம்பாக்கம் 1 (அறிவியல்), வி.நரையூர் 1 (அறிவியல்), பி.வில்லியனுார் 1 (அறிவியல்), ஆவுடையார்பட்டு 1 (அறிவியல்), சொரத்துார் 1 (கணிதம்), கழிகுப்பம் 1 (அறிவியல்), பாங்கொளத்துார் 1 (சமூக அறிவியல்) என 12 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் நிலையில் புலிவந்தி பள்ளியில் 1, கல்லாலிப்பட்டு 1, காரியமங்கலம் 1, கள்ளகொளத்துார் 2, கந்தாடு 1, கொட்டிக்குப்பம் 2, ராயப்புதுக்குப்பம் 2, புளிச்சப்பள்ளம் 1, பொம்பூர் 2, பனமலை 1, சிறுவாக்கூர் 1, வி.சாத்தனுார் 1, கண்டம்பாக்கம் 1, பானாம்பட்டு 1, பில்லுார் 1, பிடாகம் 1, பள்ளிப்புதுப்பட்டு 1, விநாயகபுரம் 2, வடவாம்பலம் 2, என்.ஆர்.பாளையம் 1, சொர்ணாவூர் கீழ்ப்பாதி 2, கொடுக்கூர் 1, ராம்பாக்கம் 3, பி.வில்லியனுார் 1, கருங்காலிப்பட்டு 2, சொரத்துார் 1, கழிக்குப்பம் 2, அகலுார் 1, கீழ்காரணை 1, வெங்கந்துார் 1, கொந்தமூர் 1, வானுார் 1, நெமிலி 1 என மொத்தம் 44 பணியிடங்கள் காலியாக உள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் 18 ஆயிரம் ரூபாய் (கணினி பாடப்பிரிவு தவிர) மற்றும் முதுகலைப் பட்டதாரி கணினி பயிற்றுநர் நிலையில் 15 ஆயிரம் ரூபாய், பட்டதாரி ஆசிரியர் நிலையில் 15 ஆயிரம் ரூபாய், இடைநிலை ஆசிரியர் நிலையில் 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள். பட்டதாரி ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். இடைநிலை ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவர். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வரும் 7ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது