தேங்கி நிற்கும் கழிவுநீர் கண்டு கொள்ளாத மாநகராட்சி
கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனை அருகில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கடலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் உள் நோயாளியாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனை அருகில் கருமாரியம்மன் கோவில் உள்ளது.
இதன் அருகில் கால்வாயில் குப்பைகளை அகற்றாததால் சாலையோரம் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதில், அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்துக்கு பிரதானமான இந்த சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மருத்துவமனை அருகிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது கழிவுநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது