கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடந்தது.
அதனையொட்டி, காலை 9:00 மணிக்கு துவங்கி மூலவர், உற்சவர் கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குளக்கரையிலிருந்து பூங்கரகம் ஊர்வலம் வந்தது.
மதியம் 1:30 மணிக்கு கூழ்குடங்களுடன் வந்த பக்தர்கள், அம்மனுக்கு கூழ் படைத்து, மகா தீபாராதனையுடன் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.
தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு உற்சவர் கெங்கை அம்மனுக்கு காஞ்சி காமாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது
Advertisement
Advertisement