மதுபாட்டில் விற்பனை வாலிபர் கைது

பெண்ணாடம், ஜூலை 4–

மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சோழன்நகர் ரேஷன் கடை அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் பாவரசு, 19; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 8 மதுபாட்டில்கள், 200 ரூபாயை பறிமுதல் செய்தனர். 

Advertisement