நாசகார நச்சு திட்டத்தை நிறைவேற்ற துடிப்பது ஏன்?
@quote@ கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் அருகே, 1,144 ஹெக்டேர் பரப்பில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க ஆதரவு தரும் வகையில், த.வெ.க., பொய்க்கால் குதிரை அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து, கடந்த 2024 நவம்பரில் நடந்த த.வெ.க., செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றியதோடு, 'தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி' என, குறிப்பிட்டனர்.
ஆட்சிக்கு வரும் முன், நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகி விட்டதா முதல்வரே? அடுத்த கட்சி எம்.எல்.ஏ.,க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், கல்லாப்பெட்டி கூட்டணி என, தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தனது சோபா கூட்டணிக்குள் நுழைப்பதற்கும் இடையே, இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால், அதை கண்டுகொள்ள மாட்டார்கள் என நினைத்தீர்களா? நச்சுத் திட்டம் என சொன்னதை, செயல்படுத்த முனைவதற்கான காரணத்தை, முதல்வர் விளக்க வேண்டும்.
- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,quote