பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டிகள்

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டிகள் நடந்தன.

இரண்டு நாட்கள் நடந்த இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து, 46 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகளை கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

போட்டிகளில், ஆண்கள் பிரிவில் எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கீர்த்திமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், வட்டமலை பாளையம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

பெண்கள் பிரிவில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி அணி முதல் இடத்தையும், எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், அன்னை வயலட் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த தடுப்பாட்டக்காரர், சிறந்த சர்வர், டிபன்டர், பெஸ்ட் சென்டர் தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement