10 ம் வகுப்பு துணை தேர்வு  வரும், 8ல் துவங்குகிறது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு துணை தேர்வு மூன்று மையங்களில் நடக்கிறது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டு, மே மாதம் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணை தேர்வு வரும், 8ம் தேதி துவங்குகிறது.

வரும், 8ம் தேதி தமிழ், 9ம் தேதி ஆங்கிலம், 10ம் தேதி கணிதம், 13ம் தேதி அறிவியல், 14ம் தேதி சமூக அறிவியல், 15ம் தேதி விருப்ப மொழி தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுக்காக, தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பொள்ளாச்சி சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என இரண்டு வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களான நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 315, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், 129, வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 48 பேரும் இத்தேர்வை எழுதுகின்றனர்,’ என்றனர்.

Advertisement