இ–நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.139.99க்கு விற்பனை
உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், கிலோ ரூ. 139.99க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ–நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 36 விவசாயிகள், 362 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ–நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த மறைமுக ஏலத்தில், 14 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.128.99 முதல், ரூ.139.99 வரையும், இரண்டாம் தரம், ரூ.105 முதல், ரூ.127 வரையும், இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடக்கும் இ–நாம் திட்ட ஏலத்தில், கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கிறது.
கடந்த சில வாரங்களாக, இ–நாம் திட்டத்தில் நடக்கும் கொப்பரை ஏலத்தில், விலை உயர்ந்து வருகிறது.
மேலும், இத்திட்டத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை, உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94880 00163 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பொறுப்பு அருண்குமார் தெரிவித்தனர்.
மேலும்
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆக., 13 வரை; முக்கிய மசோதாக்கள் கொண்டு வர மத்திய அரசு திட்டம்
-
300 சொகுசு ஹோட்டல்களில் தங்கி மோசடி: தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிஷாவில் கைது
-
உணவுப்பொருட்கள் ஏற்றுமதி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
-
ஒப்பந்தம் விடாத ‘ஸ்கேட்டிங்’ மைதானத்திற்கு கட்டணம் வசூலித்து ரூ.பல லட்சம் கொள்ளை தனியார் செயலுக்கு குடியிருப்போர் நலச்சங்கம் எதிர்ப்பு
-
தடுப்பு இல்லாத பரந்துார் சாலையில் விபத்து அபாயம்
-
குழாய் சீரமைப்பு பணி அரைகுறை காஞ்சியில் வீணாகும் குடிநீர்