காங்கிரஸில் இணைவதா, பாஜ உடன் கூட்டணியா: ஒரே நேரத்தில் இரு தரப்புடன் சரத் பவார் பேச்சு
மும்பை: காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை முழுமையாக இணைப்பதா அல்லது பாஜ தலைமையிலான தேஜ கூட்டணியில் சேருவதா என சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத்பவார் பதவி வகித்து வருகிறார். மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை கட்சி இழுக்கும் குற்றச் சாட்டுகளுக்கு மத்தியில், தனது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் (சரத்சந்திர பவார்) ஏற்பட்ட உட்கட்சிப் பிளவுகளால், சரத் பவார் தனது கட்சியை முழுமையாக இணைப்பதா அல்லது பாஜ தலைமையிலான தேஜ கூட்டணியில் சேருவதா என இரு தரப்புடனும் பேச்சு வார்த்தையைத் துவங்கி உள்ளார்.
எட்டு லோக்சபா எம்.பி.க்கள் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட சரத்பவாரின் கட்சிக்குள் உட்கட்சி மோதல் நிலவுகிறது. ஐந்து எம்.பி.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைய விரும்புவதாகவும், மீதமுள்ளவர்கள் பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணியுடன் இணைய விரும்புவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. எம்.எல்.ஏ.க்களும் இதேபோல் பிளவுபட்டுள்ளனர்; சிலர் காங்கிரஸுடன் இணைவதை ஆதரிக்கின்றனர், மற்றவர்கள் ஆளும் கட்சியையே விரும்புகின்றனர்.
இந்நிலையில் மகள் சுப்ரியா சுலேவுக்கு பெரிய பதவி வழங்கப்பட்டால் கட்சியை காங்கிரஸுடன் இணைக்க சரத்பவார் தயாராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் செயற்குழுவில் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால் இது சாத்தியமாகும் என சரத்பவார் கட்சியினர் தெரிவித்தனர். இத்தகைய ஒப்பந்தம் பிளவைத் தடுத்து, எதிர்க்கட்சியை வலுப்படுத்தும் என்று ஆதரவாளர்கள் நம்புகின்றனர். மறுபக்கம் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்புவதாகவும் பேசப்படுகிறது.
சுப்ரியா சுலேவின் மகள், ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ள நாக்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் திருமணம் செய்துகொண்ட பிறகு, பாஜகவுடனான மறைமுகத் தொடர்பு வேகம் பெற்றதாகவும், சுலேவுக்கு மத்திய அமைச்சரவையில் ஓர் இடமும், பவாரின் விசுவாசிகளுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
''மாநில அளவில் எந்த இணைப்புப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், கட்சியின் மேலிடம் என்ன முடிவு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்றும் கட்சி தலைவர்கள் கூறினர்.இருப்பினும், பாஜவுடனான தனது பேரம்பேசும் நிலையை வலுப்படுத்து வதற்காகவே சரத்பவார் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையை துவங்கி உள்ளார் என்கின்றனர்.
வாசகர் கருத்து (9)
Barakat Ali - Medan,இந்தியா
02 ஜூலை,2026 - 14:47 Report Abuse
Professional old 0
0
Reply
Ramesh Rayen - Abu Dhabi,இந்தியா
02 ஜூலை,2026 - 14:13 Report Abuse
எங்கிருந்து வந்தீர்களோ அங்கே செல்லுங்கள் 0
0
Reply
kulanthai kannan - ,
02 ஜூலை,2026 - 12:43 Report Abuse
மராட்டிய கட்டுமரம் 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
02 ஜூலை,2026 - 11:34 Report Abuse
சகருணாநிதியின் கோணங்கித்தனத்திற்கு சற்றும் குறைவில்லாதவர். மேற்கு கருணாநிதி என்று சொல்லுமளவுக்கு பேசப்படுபவர். கலிங்கப்பட்டி வையாபுரி கோபாலசாமியின் உதவியை நாடலாம் 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
02 ஜூலை,2026 - 11:33 Report Abuse
கருநிந்தியின் கோணங்கித்தந்திருக்கு சற்றும் குறைவில்லாதவர். மேற்கு கருணாநிதி என்று சொல்லுமளவுக்கு பேசப்படுபவர். கலிங்கப்பட்டி வையாபுரி கோபாலசாமியின் உதவியை நாடலாம் 0
0
Reply
Vasan - ,இந்தியா
02 ஜூலை,2026 - 11:25 Report Abuse
யாருடன் இணைவது என்று முடிவெடுப்பதில் குழப்பமாக இருந்தால், கட்சியை இரண்டு கூறுகளாக்கி, ஒவ்வொன்றும் தலா ஒருவருடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், அணுகவும் டாக்டர் ராமதாஸ் ஐயா மற்றும் டாக்டர் அன்புமணி அவர்கள். 0
0
Reply
Tamilan - ,இந்தியா
02 ஜூலை,2026 - 10:46 Report Abuse
இவர் ஏற்கனவே தன் கட்சி கூட்டணியை தன் ஜாதிக்காகவும் காசுக்காகவும் விற்றுவிட்டார் . இனி இவரிடம் என்ன உள்ளது? மானிதான் உள்ளது . 0
0
Reply
Tamilan - ,இந்தியா
02 ஜூலை,2026 - 10:44 Report Abuse
ஏற்கனவே தன் ஜாதிக்காரரான அதானியின் உலகளாவிய கொள்ளைகளைக்காக்க லஞ்சம் பெற்றுக்கொண்டு தன் கட்சியையும் கூட்டணியையும் மதவாத குண்டர்கள் -கார்பொரேட் குண்டர்களின் கூட்டுக்கொள்ளைக்கு விற்றுவிட்டார். இவரிடம் இனி என்ன உள்ளது?. 0
0
Reply
Aam Aathmi (Mango Man) - mumbai,இந்தியா
02 ஜூலை,2026 - 10:29 Report Abuse
கருணாநிதியின் வழிகாட்டி 0
0
Reply
மேலும்
-
192 மணி நேர கான்கிரீட் சிறை... மரணத்தை வென்று மீண்ட மனிதன்:
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு; ஐகோர்ட் கிளை அவகாசம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
பழங்குடியின பெண்களுக்கு தொழிற்பயிற்சி துவக்கம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு விழா
Advertisement
Advertisement