திருப்பரங்குன்றம் மலை அளவீடு; ஐகோர்ட் கிளை அவகாசம்
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலையை மறு அளவீடு செய்ய அவகாசம் அளித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சமண கோயில்கள், பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடவரை கோயிலை பாதுகாக்க வேண்டும். ஒட்டுமொத்த மலையையும் மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். தொல்லியல்துறையின் அனுமதியுடன் யாரையும் மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். மலையை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள், இடிபாடுகளை அகற்ற வேண்டும் என மத்திய தொல்லியல்துறை இயக்குனருக்கு மனு அனுப்பினேன்.
பரிசீலிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2025 பிப்.19ல் இரு நீதிபதிகள் அமர்வு,‛மத்திய கலாசாரத்துறை செயலர், தொல்லியல்துறை இயக்குனருக்கு புதிதாக மனு அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய வாய்ப்பளித்தபின் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.
அதிகாரிகளுக்கு புதிதாக மனு அனுப்பினேன். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. மத்திய கலாசாரத்துறை செயலர் விவேக் அகர்வால், மத்திய தொல்லியல்துறை இயக்குனர்கள் ராம்ஜி நிகாம், யதுபீர் சிங் ராவத் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏப்.8 ல் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மத்திய தொல்லியல்துறையுடன் இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் திருப்பரங்குன்றம் மலை பகுதியை அளவீடு செய்ய கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணி முடிந்ததும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு நேற்று விசாரித்தது.
அரசு தரப்பு,‛மலையை அளவீடு செய்ததில், சில இடங்களில் மாறுபாடு உள்ளது. மறு அளவீடு செய்ய அவகாசம் தேவை,' என தெரிவித்தது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பிரிவி கவுன்சிலின் உத்தரவிற்கு பின் மலை மீது ஏதேனும் விரிவாக்க பணி நடந்திருந்தால், அது தொடர்பான விபரங்களை அறிக்கையில் குறிப்பிட வேண்டும். விசாரணை ஆக.14 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.
அரசியல்வாதிகளின் கணக்கு ஓட்டு மட்டுமே. எவன் எப்படி போனால் நமக்கு என்ன என்று இருப்பவர்கள். அதனால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக என்ன செய்ததோ அதையே தவேகவும் செய்கிறது, செய்யும். அவர்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. இந்துக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால் அனைத்து தமிழக அரசியல்வாதிகளும் ஓடி விடுவார்கள். ஆனால் வெட்கம் கெட்டவர்கள் மீண்டும் மீண்டும் இவர்களுக்கே ஓட்டு போடுவார்கள். ஆடு கசாப்பு கடைக்காரனைத் தான் நம்பும் என்று சொல்வார்கள். நீதிமன்ற உத்தரவு இருந்தாலும் விஜய்யின் தவேக திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளுமா என்பது சந்தேகமே. அந்த தொகுதியில் நின்று ஓட்டு கேட்டு வென்று இன்று அமைச்சராக இருக்கும் நிர்மல் குமார் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தானே பேசினார். இதையே ஒரு சிறுபான்மை இன வழிபாட்டுத் தளத்தைப் பற்றி இப்படி பேச அவருக்கு துணிவு இருக்குமா ? இன்றைக்கு மந்திரியாகி விட்டால் எதையும் பேசலாமா ? நாளை கருவேப்பிலை போல தூக்கிப் போட்டால் கேட்பதற்கு நாதி கிடையாது. கடவுள் தண்டிப்பார்.
இப்படியே தள்ளிக்கிட்டு போங்க. வெளங்கிடும். முருகா.
திருப்பரங்குன்றத்தை வைத்தி மதுரையின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க பல கயவர்கள் கிளம்பியுள்ளார்.
நீ திருட்டு திமுக கொத்தடிமையா ...
முருகன் வடக்கன் கடவுள் கிடையாது , முருகன் தமிழ்க்கடவுள் என்று கூவும் மதம் மாற்றிகள் ஒருத்தனும் திருப்பரங்குன்றம் பற்றி வாய் திறக்கமாட்டானுங்க ....முருகன் தமிழ் கடவுள் என்றால் இங்குள்ள மதம் மாற்றிகளும் முருகனைத்தான் கும்பிடறானுங்களா ....
மதுரை ரமேஷ் இந்து கோவில்களை பாதுகாப்பதில் நன்றாக செயல்படுகிறார். அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் ஜெயம் உண்டாகும்.மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது