கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு விழா

திருக்கோவிலுார்: கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு வார விழா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு மண்டல இணை பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். திருக்கோவிலுார் சரக துணை பதிவாளர் சாந்தி, ஒன்றிய பொது விநியோக திட்ட கூட்டுறவு சார் பதிவாளர் அனுஷா முன்னிலை வகித்தனர். வங்கி செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார்.

நானோ யூரியாவின் பயன்கள் குறித்து கள அலுவலர் ஹரிஷ்கவுதம் மகளிர் குழு மற்றும் விவசாயிகள், பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். 5 குழுக்களுக்கு ரூ. 73.52 லட்சத்திற்கான தாட்கோ மற்றும் தனிநபர் கடனுக்கான காசோலையை மண்டல இணைப்பதிவாளர் பயனாளிகளுக்கு வழங்கினார். திருக்கோவிலுார் சரக அலுவலக கண்காணிப்பாளர் நிர்மல் நன்றி கூறினார்.

Advertisement