அதிமுக தலைமையின் தவறான முடிவே இதற்கு காரணம்; தவெகவில் இணைவதற்கு முன் விஜயபாஸ்கர் பேட்டி

21


செங்கல்பட்டு: அதிமுக தலைமையின் தவறான முடிவு மற்றும் தவறான போக்கு தான் தவெகவில் இணைவதற்கான காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமான அதிமுகவினர் தவெகவில் இணையும் விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்ட முறையில் செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் பஸ்களில் திரண்டு வந்தனர்.

இந்த நிலையில், தவெகவில் சேருவதற்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியதாவது; ஒட்டுமொத்த புதுக்கோட்டை அதிமுக, விராலிமலை தொகுதி, கரூர், திருச்சி, தஞ்சை,பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து அணி அணியாக, திரள் திரளாக வருவதை பார்க்கிறீர்கள். அதிமுக தலைமையின் தவறான முடிவால் தவறான போக்கால், இன்றைக்கு தவெக தான் ஒரு அருமையான களம். மக்கள் சேவை செய்வதற்கான களம் என்பதை நிருபிக்கக் கூடிய வகையில், பிரமாண்ட முறையில், விதிகளுக்குட்பட்டு இந்த விழா நடக்கிறது. இது ஒரு மாபெரும் திருவிழா, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement