மின்சார வாகன பயன்பாடு உச்சம்; ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி சேமிக்க முடியும்!
நமது சிறப்பு நிருபர்
இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தால், 2030ல் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம் ஆகும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக சமீப காலமாக மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 12 மாநிலங்களில் மின்சார வாகன விற்பனை சதவீதம் இரட்டை இலக்கத்தை தாண்டியது. இதில் அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
2030க்குள் புதிய வாகனப் பதிவுகளில் மின்சார வாகனங்களின் பங்கை தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்துவது, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடியைச் சேமிக்க உதவும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை 2025ல் உள்ள 2.9 கோடியிலிருந்து 2030-க்குள் சுமார் 4 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 80 லட்சம் வாகனங்கள், அதாவது 20% மின்சார வாகனங்களாக இருக்கலாம்; 2025ல் மின்சார வாகனப் பதிவுகள் 15.7 லட்சமாக இருந்தன.
2027ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டுக்குள் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாகக் கூடுதலாக 35 லட்சம் மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடும். இத்தகைய அளவிலான மின்சார வாகனப் பயன்பாட்டு அதிகரிப்பு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவை கணிசமாக குறைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்நிய செலாவணி மிச்சம் ஆகாது. லித்தியம் கோபால்ட் போனற கனிமங்கள் 100% இறக்குமதிதான் செய்கிறோம் . அது பத்து வருட வாகன எரிபொருளுக்கு சமம். அவற்றையும் இங்கேயே உற்பத்தி செய்தால்தான் அந்நிய செலாவணி மிச்சம் ஆகும்.
இதில் உள்ள பாட்டரிகளை சோலார் பானல் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம் .பலருக்கு இது இலவச மின்சாரமாக கிடைக்கிறது .போக்குவரத்து நெருக்கடி சிக்னல் காத்திருப்பு நேரங்களில் மின்சாரம் செலவு ஆவதில்லை .
This EV two wheelers contain less spare parts .It is not emitting carbon di oxide.
இதனால் அதிகப்படியாக தேவைப்படும் மின்சாரத்தை அணுசக்தி அல்லது புதுப்பிக்க தக்க சக்திகள் மூலம் பெற வேண்டியதும் முக்கியம்.மேலும்
-
அதிமுகவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்; வைகைச் செல்வன் ராஜினாமா
-
கோவில்களில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை: புகார் அளிக்க அமைச்சர் ரமேஷ் அழைப்பு
-
2026, தமிழ் சினிமா அரையாண்டு ரிப்போர்ட் : 118க்கு 6 படங்கள் மட்டுமே லாபம்!
-
பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு கண்டனம்; இந்தியா - ஜப்பான் கூட்டறிக்கை
-
சொல்கிறார்கள் ––––––––––– ‘உழைப்பும் மன உறுதியும் இருந்தால் ஜெயிக்கலாம்!’
-
முதல்வருக்கு எதிராக அவதுாறு; மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது