அடுத்த வாரம் நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி
புதுடில்லி: அடுத்த வாரம் நியூசிலாந்துக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். அப்போது இந்தியா- நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியப் பிரதமர் மோடி அடுத்த வாரம் நியூசிலாந்திற்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகும்; மேலும் நியூசிலாந்தின் பொருளாதார செழிப்பிற்கு மிகவும் முக்கியமான நாடாகவும் அது திகழ்கிறது. ஏப்ரல் மாதம் கையெழுத்தான நியூசிலாந்து-இந்தியா இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடைந்தது.
இந்த ஒப்பந்தம் நியூசிலாந்திற்கு அதிக வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். இது 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சந்தையில் ஏற்றுமதியை அதிகரிக்கப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்; இதன் மூலம் நியூசிலாந்து சமூகங்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதோடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு ஊதியமும் உயரும். இவ்வாறு கிறிஸ்டோபர் லக்சன் கூறினார்.
ஊரு ஊரா போயி, நாடு நாடாக போயி வர்த்தக ஒப்பந்தமா கையெழுத்து போடுறீங்க. சரி வாழ்த்துக்கள். ஆனா இதுவரை விலைவாசி குறைந்ததா வரலாறு இல்லை, நாடு பெருமளவில் அறிவியலிலோ, கட்டுமானத்திலோ, உலக வர்த்தகத்திலோ, கண்டுபிடிப்பிலோ, சுகாதாரத்திலோ, வேலை வாய்ப்புகளிலோ அதீத வளர்ச்சிகளை கண்டு விட்டதாக எனக்கு தெரியவில்லை. உலக பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இருக்கும் நாம் நமக்கு அடுத்து உள்ள நாடுகளின் வாழ்தரத்தை விட கேவல நிலையில்தான் உள்ளோம் என்கிறேன்.
இந்திய முன்னேறணும்னா உன்னை மாதிரி ஆளுங்க சூப்பர் திருட்டு திருட்டு திமுக, சுமார் திருட்டு அதிமுக, திருமாவின் சிறுத்தை குட்டீஸ், பெட்டி வைகோவின் மதிமுக, பெட்டி பிரேமலதா, ஊழல் கான்கிராஸ் காங்கிரஸ், மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ், மகாராஷ்டிரா கட்டுமரம் தேசியவாத காங்கிரஸ், ஒயின் வருமானம் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், பீகாரின் கட்டுமரம் லாலு பிரசாத் யாதவ் போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போடாமல் இருக்கணும். முதல்ல அதை செய்யுங்க. இந்தியா தானா வளரும்.
mummy daddy mummy daddy give me some agreement and medal
மோடிஜி உலகத்துல வேற ஏதாவது நாடு பாக்கி இருக்கா நீங்க போறதுக்கு? உங்களுக்கு வீசா வேணாம், ஏர் டிக்கெட் விலையை பாத்து போக வேணாம், பயண செல்வ குறைங்கனு வேற யாரும் சொல்ல கூடாது? நீங்க என்னப்பா மவராசன், எங்கள மாதிரியா?
Thalaiva, jolly life, enjoy and I want you to continue as the PM for next 15 years.Great man Modi
கொடுத்துவச்சவரு அரசாங்கசெலவுல நாடுநாடா சுத்துறார். வருசத்துல பாதிநாளு தலைவரு நாட்டில் இருக்கமாட்டார்
வழக்கம் போல் இந்திய வம்சா வழியினர் ஆடல் பாடல் வரவேர்ப்பு நியூ சிலான்ட் பிரதமரோடு கார் பயணம் பின்னே ஒரு மெடல் அல்லது அவார்டு ஒரே காட்சிகள் இடம் தான் வேறு
தனது இந்திய பயணத்தை முடித்து கொண்டு வெளி நாடு திரும்பினர் பிரதமர் என்று தலைப்பு செய்தி இருக்க வேண்டும்
உலகமெல்லாம் பந்தா செய்வது தான் மோடியின் வேலை
மெடல் ரெடியாயிருக்கும். நாலஞ்சு ஒப்பந்தம் கையெழுத்து. வேற எதுவும் பெருசா நடக்காது.
நாட்டுக்கு நன்மை பயக்கும் ஒரு செயல் திட்டத்தோடு திரும்புவார்.
நாட்டுக்கா? பெரு முதலாளிகளுக்குக்கா?மேலும்
-
அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பிரதமர் மோடி 5 அன்பு கட்டளை!
-
விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை; சரக்கு கப்பல்களுக்கு ஈரான் திடீர் மிரட்டல்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் சம்மன்; விசாரணைக்கு வராத திமுக மாஜி எ.வ.வேலு
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
நாய் குரைத்ததால் கத்தியால் குத்தி கொடூரம்; போலீஸ் வழக்கு
-
உ.பி.,யில் பஸ் மீது லாரி மோதி விபத்து; 5 பேர் பலி