சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் குறைகிறது; பயணிகள் நிம்மதி
புதுடில்லி: மேற்காசியாவில் நிலவிய போர் பதற்றங்களால் உயர்த்தப்பட்ட சர்வதேச விமான டிக்கெட் கட்டணம் குறைய தொடங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி துவங்கிய அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை உயர்ந்தது. இதனால், செலவுகளை ஈடுகட்ட விமான நிறுவனங்கள், எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தின. இது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. இதனால், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலையும் சரிந்தது.
எனவே, விமானக் கட்டணத்தின் முக்கிய அங்கமான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை குறைக்க விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால், சர்வதேச விமான டிக்கெட்டுகளின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஜூலை 1 முதல் குறைத்துள்ளது.
ஐரோப்பா மற்றும் பிரிட்டன் வழித்தடங்களுக்கான சர்வதேச எரிபொருள் கூடுதல் கட்டணத்தை 38 சதவீதமும், ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க வழித்தடங்களுக்கு 28.5 சதவீதமும் ஏர் இந்தியா நிறுவனம் குறைத்துள்ளது.
அதாவது, ஏப்ரல் 10ம் தேதி முதல் ஐரோப்பா செல்லும் பயணிக்கு ரூ.19,520ஆக இருந்த எரிபொருள் கூடுதல் கட்டணம், தற்போது ரூ.11,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்கா வழித்தடங்களுக்கு முன்பு ரூ.26,664 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.10,045 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், ஓமன் நாட்டின் சலாலா மற்றும் குவைத் ஆகிய இடங்களுக்கான விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.இதன்மூலம், மேற்காசியாவில் வழங்கி வந்த அனைத்து இடங்களுக்கும் விமானச் சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது
வாசகர் கருத்து (2)
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
03 ஜூலை,2026 - 16:40 Report Abuse
கிட்டத்தட்ட 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து சென்னைக்கு வந்துபோகுற நிலையில் சிங்கப்பூர் டு சென்னைக்கு எவ்வளவு குறையும்ன்னு தெரியல. இந்த ட்ரம்பை நம்பி எண்ணெய் விலையை குறைப்பது சந்தேகமே . 0
0
Reply
Aam Aathmi (Mango Man) - mumbai,இந்தியா
03 ஜூலை,2026 - 12:29 Report Abuse
டாலர் 87 லிருந்து 95 ...அமேரிக்கா சென்று வர எகானமி டிக்கட் 1200 டாலராக இருந்தது இப்போ 2000 டாலர் ... டாலரில் அதிகம் டாலர் மதிப்பும் அதிகம் ..அடிக்கடி பாத்ரூம் போக நடையோரே சீட் செலக்ஷனுக்கும் 10000 ரூவா அதிக பணம் கட்ட வேண்டியிருக்கு 0
0
Reply
மேலும்
-
192 மணி நேர கான்கிரீட் சிறை... மரணத்தை வென்று மீண்ட மனிதன்:
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு; ஐகோர்ட் கிளை அவகாசம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
பழங்குடியின பெண்களுக்கு தொழிற்பயிற்சி துவக்கம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு விழா
Advertisement
Advertisement