போலீசார் தாக்கியதாக வாலிபர் புகார்

தேனி, ஜூலை 3–

திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கியதாக பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரன் போலீசில் புகார் செய்தார்.

பழனிசெட்டிபட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பாக போலீசார் சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படியில் சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கின்றனர். அப்பகுதியை சேர்ந்த வேல்முருகன் மகன் பாண்டீஸ்வரன் 22. இவர் மாரியம்மன்கோயில்பட்டி விலக்கில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்கிறார். திருட்டு வழக்கில் விசாரணைக்காக பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று முன்தினம் மாலை இவரை அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின் கைரேகை வாங்கிவிட்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பாண்டீஸ்வரனை வலையபட்டியில் உள்ள கல்குவாரிக்கு அழைத்து சென்று 4 போலீசார் தாக்கினர் என்று கூறி பெற்றோர், உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து வாக்குவாதம் செய்தனர். போலீசார் சமாதானம் செய்து அவர்களிடம் புகாரை பெற்று திருப்பி அனுப்பினர்.

Advertisement