நாய் குரைத்ததால் கத்தியால் குத்தி கொடூரம்; போலீஸ் வழக்கு
கோவை: தன்னைப் பார்த்து குரைத்த நாயை கத்தியால் குத்தி கொன்றவர் மீது கோவை மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை பாலத்துறை முருகன் கோவில் வீதியில் ரஞ்ஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 வயதான பொமரேனியன் ரக நாய் வளர்த்து வந்தார். இவரது நாய் குரைத்துக் கொண்டு இருந்ததற்கு பக்கத்து வீட்டுக்காரர் விமல் சண்டை போட்டு இருக்கிறார்.
ஆத்திரம் அடைந்த விமல் கத்தியால் ரஞ்ஜித்தின் வளர்ப்பு நாயை சரமாரியாக குத்தி விட்டார். இதில் அந்த நாய் உயிரிழந்தது. மிருக வதை தடுப்பு சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன் அளித்த புகார் படி கோவை மதுக்கரை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
God bless all - ,
03 ஜூலை,2026 - 10:49 Report Abuse
ஓம் சாந்தி. வெறும் நான்கு அறிவு மட்டுமே கொண்ட சில மிகக் கொடூரமான மனிதர்கள். அத்தகைய கொடூரமான மனிதர்களுக்கு எப்படித் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கடவுளுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் கர்மவினைக்காகக் காத்திருங்கள். நீங்கள் விதைத்ததையே அறுப்பீர்கள். 0
0
Reply
Premanathan S - Cuddalore,இந்தியா
03 ஜூலை,2026 - 10:15 Report Abuse
இப்போதெல்லாம் மனிதனின் நலனை விட நாய்களின் நலனில் தான் அரசு, போலீஸ், சட்டம் அக்கறை காட்டுகிறது 0
0
Reply
மேலும்
-
சொல்கிறார்கள் ––––––––––– ‘உழைப்பும் மன உறுதியும் இருந்தால் ஜெயிக்கலாம்!’
-
முதல்வருக்கு எதிராக அவதுாறு; மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
-
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் கைது
-
அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பிரதமர் மோடி 5 அன்பு கட்டளை!
-
விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை; சரக்கு கப்பல்களுக்கு ஈரான் திடீர் மிரட்டல்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் சம்மன்; விசாரணைக்கு வராத திமுக மாஜி எ.வ.வேலு
Advertisement
Advertisement